பாலமுருகன் கோவிலில் 29ல் ஆடி கிருத்திகை விழா

67பார்த்தது
பாலமுருகன் கோவிலில் 29ல் ஆடி கிருத்திகை விழா
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் தென்கரையில், ஜெயகணபதி, பாலமுருகன் கோவில் 20ம் ஆண்டு விழா, சரவணபவாநந்த சபாவின், 50ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா, ரதம், பால்காவடி மஹோற்சவம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், மாலை அணிதலும் நடந்தது. தொடர்ந்து கலச பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

நாளை, மாலை 6: 00 மணிக்கு ராகவேந்திரா நாட்டியலயா குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு அலங்காரம், மவுனபூஜை, மஹாதீபராதனை நடக்கிறது

வரும் 28ம் தேதி மாலை, சந்தவெளி அம்மன் கோவிலில் இருந்து அலகு தரித்து சக்தி கலசம் ஊர்வலமும், தொடர்ந்து ஜெயகணபதி, பாலமுருகன் கோவிலில் பரணி பூஜை, தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

ஆடி கிருத்திகையான வரும் 29ம் தேதி, அதிகாலை 4: 00 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் அடியார்கள் அலகு தரிக்கும் நிகழ்வு நடக்கிறது.

மாலை 6: 00 மணிக்கு முருகப் பெருமான் தேரில் எழுந்தருளி பவனி வருகிறார். 30ம் தேதி, இடும்பன் பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி