பரனூர் சுங்கசாவடியில் துணை ராணுவத்தினர் தீவிர சோதனை

73பார்த்தது
இந்தியாவில் 2024 பொது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்புகளையும், சோதனை சாவடிகளையும் அமைத்தும் தீவிர வாகன சோனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை - செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதி, அதே போல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம், செங்கல்பட்டு - விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், மற்றும் தூப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உதவியும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பட பட்டுவாடா நடைபெறாமல் இருக்க சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி பணத்தை வாகனம் மூலம் கடத்தப்படலாம் என்பதால் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னைக்கு அருகாமையில் உள்ள சுங்கசாவடி செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி 24 மணி நேரமும் பல ஆயிரகணக்கான வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கியும் அதே போல் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி செல்கின்றது அதிக வாகனம் பயணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி