குரூப் 4 பயிற்சி பெறும் மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

63பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் மதுரை கோவிந்தம்மாள் கல்வி அறக்கட்டளை DGA பயிற்சி பள்ளி மூலம் இளைஞர்களுக்கு நீட், டிஎன்பிஎஸ்சி மற்றும் கல்பாக்கம் அணு சக்தி துறை வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இப்பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற லோகேஸ்வரி என்ற மாணவி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் அதேபோன்று டிஎன்பிஎஸ்சி 4 வது குரூப் பயிற்சி பெற்ற பவானி என்ற மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய் துறையில் அரசு பணியில் சேர்ந்தார் கல்பாக்கம் அணுசக்தி துறையில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு பயிற்சி பெற்ற ஏழு மாணவர்களில் ஐந்து பேர் வெற்றி பெற்று மத்திய பணியில் சேர்ந்துள்ளனர் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி 4வது குரூப் பணிக்கு இலவச பயிற்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் பொன்னரசி என்ற காது கேளாத வாய் பேசாத கணவனால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளை வைத்துள்ள மாணவி உட்பட 18 பேர் தற்போது பயிற்சி பெறுகின்றனர் அறக்கட்டளையின் நிறுவன முன்னாள் எம் எல் ஏ தனபால் அறக்கட்டளையின் தலைவரும் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவருமான டாக்டர் காயத்ரி தனபால் ஆகியோர் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறியதுடன் புத்தாண்டை கொண்டாடுகின்ற வகையில் கேக் வெட்டி மாணவர்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி