செம்பூண்டி கிராமத்தில் சிசிடிவி கேமரா திறப்பு

57பார்த்தது
தமிழகத்தில் தற்பொழுது கொலை கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது அவற்றை தடுக்க தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர் அதில் ஒன்றுதான் சிசிடிவி


சிசிடிவி உள்ள இடங்களில் ஏதாவது குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கும் ஏதுவாக இருக்கும் இதனால் காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட செம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் ராஜன் அவர்களின் முயற்சியால் ஊராட்சி நிதியிலிருந்து ரூபாய் 1. 75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்.

மூன்றாம் கண்ணாக இருக்கும் சிசிடிவி கேமராவை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட துணை
காவல்துறை கண்காணிப்பாளர் சிவசக்தி கலந்துகொண்டு சிசிடிவி கேமராவின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஒன்றிய குழு உறுப்பினர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி