அணுசக்தி தொழில்நுட்ப பயிற்சி கல்பாக்கத்தில் பட்டமளிப்பு விழா

85பார்த்தது
அணுசக்தி தொழில்நுட்ப பயிற்சி கல்பாக்கத்தில் பட்டமளிப்பு விழா
கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், கடந்த 2006 முதல் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியில், அணுசக்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி, ஓராண்டு அளிக்கப்படுகிறது.

அணு அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பாக, அணு உலை இயற்பியல், அணு எரிபொருள் சுழற்சி வேதியியல், மின்னணுவியல், கருவியியல், இயந்திர பொறியியல், ரசாயன பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 18ம் ஆண்டாக, தற்போது 20 பேர் பயிற்சி பெற்றனர்.

சிறப்பு விருந்தினராக, மும்பை, ஹோமிபாபா நேஷனல் இன்ஸ்டிடியூட் டீன் ஏ. கே. தியாகி, இப்பயிற்சியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, பதக்கம், சான்றிதழ் உள்ளிட்ட ஹோமிபாபா பரிசு தொகுப்பு வழங்கினார்.

கடந்த 1939ல், அணுசக்தி திட்டம் துவக்கியது முதல், தற்கால முன்னேற்றம் வரை விளக்கினார். தன் அனுபவத்தை விவரித்து, பயிற்சியாளர் அம்ரித்கால், இலக்கு நோக்கத்துடன் செயல்பட வலியுறுத்தினார்.

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சி. ஜி. கர்ஹாட்கர், அணுசக்தி துறை பணியில் அர்ப்பணிப்பும், ஆர்வமும் அவசியம் என, குறிப்பிட்டார்.

நடப்பாண்டு பயிற்சியில், அணு எரிபொருள் சுழற்சி வேதியியல் துறையில் பயிற்சி பெற்ற கன்னையா குமார் பகத், ஒட்டுமொத்த முதலிடம் பெற்றார். பயிற்சிப் பள்ளி தலைவர் வித்யா சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி