தெலங்கானா மாநிலம் நாரணயப்பேட்டை மாவட்டத்தில் ராய்ச்சூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று, பேருந்தின் பின்னால் மோதியது. இந்த விபத்தின்போது பேருந்தில் இருந்து பறந்து விழுந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.