ஏர்டெல்லின் ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இது எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் சேவைகளை வழங்குகிறது. இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் 24ஜிபி டேட்டா கிடைக்கிறது, அதாவது மாதத்திற்கு 2ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். வருடத்திற்கு ரூ.1,999 என்பதை நாள் ஒன்றுக்கு கணக்கிட்டு பார்த்தால் ரூ.5 என்ற வகையில் தான் செலவாகும்.