ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பேச்சு: திருமாவளவனுக்கு பாஜக ஆதரவு

60பார்த்தது
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பேச்சு: திருமாவளவனுக்கு பாஜக ஆதரவு
காஞ்சிபுரம் அடுத்த நல்லூர் கிராமத்தில் சங்கரா செவிலியர் கல்லூரியின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு மாநில பொறுப்பாளர் எச். ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜாவிடம் ஓரிரு நாளில் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த நிலை குறித்து கேட்டபோது, நீதிமன்றம் தலைமை செயலகம் செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இது போன்ற அறிவிப்பை வெளியிட செய்தது சரியான செயல் என தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தகைள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூட்டணி ஆட்சியில் பங்கு குறித்த வீடியோ வெளியிட்ட காட்சிகள் குறித்து கேட்டபோது, திருமாவளவன் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்டது சரியானதே எனவும், இதனை நூறு சதவீதம் பாஜக ஆதரிக்கிறது எனவும் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி என்பதற்கு முழு உதாரணம் வாஜ்பாய் ஆட்சியே எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் ஜம்போடைசங்கர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி