நாய்க்கடியால் ஒவ்வொரு மணி நேரமும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு புள்ளி விவரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024இல் மட்டும் 22 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2024-இல் நாய்க்கடியால் 37 பேர் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்துள்ளார். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளே நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.