இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானோர் தினமும் பத்து மணி நேரத்திற்கு மேலாக கணினி, செல்போன் திரையை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் நமது கண்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 20-20-20 விதி உதவியாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகள் இடைவெளி எடுத்து, சுமார் 20 அடி தொலைவில் உள்ள பொருளின் மீது கவனம் செலுத்துவது கண்களுக்கு ரெஸ்ட் அளிக்கும்.