அச்சரப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

82பார்த்தது
அச்சரப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சியில் ஸ்ரீராம் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை நீரானது குடியிருப்புகளில் சூழ்ந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் மழைக்காலம் முடிந்து ஒரு வாரகாலம் ஆகியும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர் அப்புறப்படுத்தப்படவில்லை எனக் கூறி ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இப்பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி