பஞ்சாயுதேஸ்வரர் திருக்கோவில் 108 சங்கு அபிஷேகம்

72பார்த்தது
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள
முகுந்தகிரி கிராமத்தில்
எழுந்தருளி அருள் பாலிக்கும்
சோழர்
காலத்து பழமை வாய்ந்த பஞ்சாயுதேஸ்வரர் திருக்கோவில் இருந்தது,

நாளடைவில் கோவில் சிதிலமடைந்ததால், புதிய கோவில்
கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர்,
கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.

பின் திருப்பணிகள் முடித்து கடந்த மாதம் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது, இதையடுத்து தினசரி
மண்டல அபிஷேகம் நடந்து வந்த நிலையில்,

நேற்று 48 ம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா 108 சங்கு அபிஷேகத்துடன் நிறைவடைந்தது,

108 சங்குகளை வைத்து சிறப்பு
யாகம் நடத்தி, சங்குகளில் இருந்த
புனித நீரால் பஞ்சாயுதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.

இந்நிகழ்வில் முகுந்தகிரி மற்றும்
அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி