போதை பொருளை தடுக்கும் விதமாக சிறுவர்கள் விழிப்புணர்வு

70பார்த்தது
போதை பொருளை தடுக்கும் விதமாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்கள்


மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும். போதைப் பொருள்களால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீா்குலைகிறது. இதனால் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேபோல தமிழக அரசு சார்பிலும் பல்வேறு தனியார் அமைப்பு சார்பிலும் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்


அந்த வகையில் அப்துல் கலாம் டிரஸ்ட் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து திருச்சியிலிருந்து சென்னை வரை ஸ்கேட்டிங் செய்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

அப்போது அவர்கள் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது செங்கல்பட்டு அருகே வந்தனர் அப்போது அவர்களுக்கு செங்கல்பட்டு லயன்ஸ் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

இந்த ஸ்கேட்டிங் நிகழ்வில் ஐந்து வயது முதல் 15 வயது கூடிய குழந்தைகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி