அதிமுக வேட்பாளர் மறைமலைநகரில் தீவிர பிரச்சாரம்

52பார்த்தது
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மறைமலைநகரில் தீவிர பிரச்சாரம்.

வழிநெடுக மலர் தூவி வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கட்சி உறுப்பினர்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் வேட்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் ஆங்காங்கே தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகர் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

அப்போது மறைமலைநகரில் அவருக்கு அனைத்து பகுதியிலும் ஜேசிபி மூலம் மலர் தூவியும் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளருக்கு சால்வை அனுபவிப்பதற்கு அக்கட்சியினரே வேட்பாளரை சூழ்ந்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது.

அதேபோல காந்திநகர் பகுதியில் 108 பெண்கள் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர் பின்பு
வேட்பாளருக்கு
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.!

தொடர்புடைய செய்தி