மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், பசு மாடு, தெரு நாய் பலி

52பார்த்தது
மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், பசு மாடு, தெரு நாய் பலி
உயர் மின் அழுத்த மின்வடம் அறுந்து விழுந்ததில், பிளம்பர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். மற்றொரு சம்பவத்தில் பசு மாடு மற்றும் தெரு நாய் ஆகியவையும் இறந்தன.

சென்னை, மேடவாக்கம், ஜல்லடியான்பேட்டை, பழண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகு, 46, பிளம்பர்.

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கீழே விழுந்தது.

எதிர்பாராதவிதமாக, மின்கம்பியை மிதித்த ரகு மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ரகுவின் உடலை கைப்பற்றி, பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு பணியை, மின்வாரியத்தின் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.

போரூர் சுங்கச்சாவடி அருகே, சமயபுரம் பிரதான சாலையில் காலி மனை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் கனமழை பெய்த போது, அந்த பகுதியில் மின் கேபிள் திடீரென அறுந்து விழுந்து கிடந்தது.

நேற்று காலை, அந்த காலி மனை வழியாக நடந்து சென்ற பசு மாடு மற்றும் தெரு நாய் ஒன்று, அறுந்து கிடந்த மின் கேபிளை மிதந்தன. அப்போது, மின்சாரம் பாய்ந்த பசு மாடு மற்றும் தெரு நாய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி