செய்யூரில் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 72 கிலோ பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் தளபதி உதயநிதி ஆகியோரின் உருவம் வரைந்த பிரம்மாண்ட 72 கிலோ கேக் வெட்டும் நிகழ்ச்சி இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ். பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் க. சுந்தர் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். டி. அரசு ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பொது மக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.