படப்பையில் குப்பை அழிக்க இயந்திரம் இருந்தும் பயனில்லை

82பார்த்தது
படப்பையில் குப்பை அழிக்க இயந்திரம் இருந்தும் பயனில்லை
படப்பை ஊராட்சியில் குப்பையை அழிக்க, 61 லட்சம் ரூபாயில் இயந்திரம் அமைத்து, இயக்காததால் மலை போல் குப்பை தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

குன்றத்துார் ஒன்றியத்தில் படப்பை ஊராட்சி அமைந்துள்ளது. தாம்பரம் அருகே புறநகர் பகுதியில் படப்பை உள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதனால், படப்பை ஊராட்சியில், நாளொன்றுக்கு 4, 000 கிலோ குப்பை சேகரமாகிறது.

இந்த குப்பை, படப்பை புஷ்பகிரி சாலையில், பெரியார் நகர் பகுதியில் சாலையோரம் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படப்பை ஊராட்சியின் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஒரகடத்தில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையின் சி. எஸ். ஆர். , நிதி மூலம், 61 லட்சம் ரூபாய் மதிப்பில், காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம், கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரம் வாயிலாக, எண்ணெய், மின்சாரம், நிலக்கரி ஆகிய எரிபொருள் இல்லாமல், காந்த சக்தி வாயிலாக ஏற்படும் வெப்பத்தால், குப்பையை சாம்பலாக்கும் திறன் உடையது.

இந்த இயந்திரம் வாயிலாக, நாளொன்றுக்கு 5, 000 கிலோ எடை குப்பையை அழிக்க முடியும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், படப்பை ஊராட்சியின், குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, மக்கள் எதிர்பார்த்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி