நடிகர் மீசை ராஜேந்திரன் தனது 60வது பிறந்த நாளையொட்டி உடல் உறுப்பு தானம் செய்தார். பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், மீசை ராஜேந்திரனுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தேமுதிக செய்தித் தொடர்பாளராக இருந்து வரும் மீசை ராஜேந்திரன், திருப்பாச்சி, அயன், நந்திவர்மன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.