குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்தது
ஐந்து நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
சென்னை அருகே குன்றத்தூரில் எலிமருந்து நெடியால் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது. குன்றத்தூரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கிரிதரன் - பவித்ரா தம்பதியினரின் இரு குழந்தைகள் கடந்த 15-ஆம் தேதி அவர்களது வீட்டில் எலி மருந்து வைத்த போது அதன் நெடியின் காரணமாக உயிரிழந்தன. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்து சாய் சுதர்சன் (1), விசாலினி (6) ஆகிய குழந்தைகளின் உடல் தடய அறிவியல் மருத்துவர் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்தது.
குழந்தைகளின் பெற்றோரான கிரிதரன் - பவித்ரா இருவரும் எலி மருந்து நெடியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவர்களின் ஒப்புதலோடு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை நிறைவுற்ற பின் இரு குழந்தைகளின் உடல்களும் கும்பகோணம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான பட்டீஸ்வரம் கிராமத்தில் இறுதி சடங்குகள் மேற்கொள்ள ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.