ராட்சத பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

50பார்த்தது
ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் திடீரென மூன்று அடி ஆழத்திற்கு ஏற்பட்ட ராட்சத பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் செல்லும் சாலையில் திடீரென மூன்றடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடம் வந்த போலீசார் ராட்சதப் பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை மாற்றம் செய்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஜே சி பி இயந்திரம் மூலம் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு பூமிக்கு அடியில் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதாள சாக்கடை திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சோதனை ஓட்டம் நடந்ததால் சாலையின் மேற்பரப்பில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டாகியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி