குழாய் சேதமடைந்து சாலையில் தேங்கும் தண்ணீர்

70பார்த்தது
குழாய் சேதமடைந்து சாலையில் தேங்கும் தண்ணீர்
வாலாஜாபாத் அடுத்த சிங்காடிவாக்கம் - மருதம் இடையே, தென்னேரி வரத்து கால்வாய் குறுக்கே, மேம்பாலம் செல்கிறது.

இந்த பாலத்தின் வழியாக அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, சிங்காடிவாக்கம், சிறுவேடல், சின்னையன்சத்திரம், நீர்வள்ளூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாலாஜாபாத், தென்னேரி, ஊத்துக்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

இந்த மேம்பாலத்தின் இறக்கத்தில், இருபுறமும் தடுப்பு இல்லை. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுதவிர, மேம்பாலத்தின் மீது செல்லும் தண்ணீர் வினியோக குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால், மேம்பாலத்தில் இருந்து இறங்குவோர் கட்டுப்பாடு இல்லாமல், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் தேங்கும் நீரால், சாலை கடுமையாக சேதமடைய வாய்ப்பு உள்ளது.

எனவே, சிங்காடிவாக்கம் - மருதம் இடையே உள்ள மேம்பாலத்தில், இருபுறமும் தடுப்பு மற்றும் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி