தாழ்வாக செல்லும் மின்கம்பி சாமந்திபுரம் வாசிகள் அச்சம்

66பார்த்தது
தாழ்வாக செல்லும் மின்கம்பி சாமந்திபுரம் வாசிகள் அச்சம்
காஞ்சிபுரம் அடுத்த கொட்டவாக்கம் ஊராட்சியில், சாமந்திபுரம் துணை கிராமம் உள்ளது. குடியிருப்பு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் மும்முனை மின் இணைப்புகளுக்கு மின் வழித்தடம் செல்கிறது.

தெருவின் நடுவே ஒரு மின் கம்பமும், அருகே மற்றொரு மின் கம்பமும் உள்ளன. இந்த இரு கம்பங்களின் குறுக்கே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக உள்ளது.

மேலும், மின்கம்பம்சாய்ந்த நிலையில் இருப்பதால், இப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இந்த தெரு வழியாக வைக்கோல் ஏற்றி செல்லும் போதும், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போதும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாமந்திபுரம் கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சாமந்திபுரம் கிராமவாசிகள் கூறுகையில், மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க கோரி கிராமத்தினர் சார்பில் மனு அளித்துள்ளோம்.

'ஆனால், தற்போது வரை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். உயிர்பலி ஏற்படும் முன், மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தொடர்புடைய செய்தி