சோழிங்கநல்லூரில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

78பார்த்தது
சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்து நபர் விஷவாயுவால் தாக்கப்பட்டு தொட்டிக்குள்ளேயே பலியானார். சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பாலாஜி என்பவரும் ஒரு சில ஊழியர்களும் மேற்கொண்டனர். 

இதில் சில ஊழியர்கள் வெளியில் இருந்தனர். பாலாஜி என்பவர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது விஷவாயுவால் தாக்கப்பட்டு தொட்டிக்குள்ளேயே பலியானார். உடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு பாலாஜி பலியானது தெரியவில்லை என்பதால் 8 மணி நேரத்திற்குப் பின்னரே தகவல் கிடைத்தது. அதன்பேரில் துரைப்பாக்கம் தீயணைப்புப் படையினர் பாலாஜியின் உடலை மீட்டனர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி