தார் சாலை அமைக்கும் பணியினை அதிகாரிகள் ஆய்வு

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், அகரம் கிராமத்திலிருந்து மாம்பாக்கம் வழியாக புத்திரன் கோட்டை இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரைப்பலங்களுடன் இந்த சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ₹3. 74 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த சாலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டிய பணி ஆகும். இந்த சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறாமல் தாமதப்படுத்தி பணி செய்யப்பட்டதாக அப்பொழுது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு விடம் புகார் கூறினர்.
இதனை அடுத்து செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ. வா வேலுவை நேரில் சந்தித்து தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக புகார் கூறிய சாலையை ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்திருந்தார்.
அந்த மனுவினை பரிசினை செய்த அமைச்சர் ஏ. வா. வேலு சாலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பெயரில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இயந்திரங்களைக் கொண்டு சாலையை தோண்டி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி