18-வது மக்களவை உறுப்பினருக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் உள்ள 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததின் பேரில் காலை 7: 00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தபால் வாக்குடன் துவங்கியது.
ஆரம்பம் முதலே திமுக காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
32 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் செல்வம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 444 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3, 64, 571 வாக்குகளும் பெற்றனர்.
இதன் மூலம் இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து நானூத்தி எழுவத்தி மூணு வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்திற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி சான்றிதழ் அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தமிழக சிறு குறு தொழில் அமைச்சர் தா. மோ. அன்பரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.