மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

79பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், இஷ்ரே, உதவும் கரங்கள் மற்றும் சதுரங்கப்பட்டினம் கல்வி ஒளி நண்பர்கள் குழு இணைந்து நடத்திய கல்பாக்கம் சுற்றுப்புற 11 மற்றும் 12 ம் வகுப்பு அரசு மாணவ மாணவியர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்பாக்கம் அடுத்த அனுப்புரம் நகரியத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக இந்திரா காந்தி அனு ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் வெங்கட்ராமன், டாப்பர்ஸ் எடுகேஷன் அகாடமி நிறுவனரும், பேச்சாளருமான கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று சுற்றுப்புற பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பின் வேலை வாய்ப்பிற்காக அடுத்து படிக்க வேண்டிய பாட பிரிவுகள் குறித்தும் அணுசக்தி துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், கல்லூரியை தேர்வு செய்வது எப்படி எந்தெந்த துறைகளில் எந்தெந்த வேலை வாய்ப்புகள் உள்ளது வளர்ந்து வரும் துறைகளும் அதற்கான படிப்புகளும் என்னென்ன, அரசு தேர்வுகளை எப்படி அணுகுவது அதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதல்களை மாணவ மாணவியர்களுக்கு புரியும் வகையில் விளக்கமாக எடுத்து கூறினர் தொடர்ந்து ஆண்டு தோறும் இவ்வாறான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் அனைத்து அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி