செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

54பார்த்தது
செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு
செங்கல்பட்டு மாவட்டம், பாளூரில், போர் வீரன் தன் தலையை கத்தியால் வெட்டி பலி கொடுக்கும் அரிகண்டம் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் தலைவர் வெற்றித்தமிழன் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க தொல்லியல், கல்வெட்ட ஆய்வாளர்கள், செங்கல்பட்டு பாலாறு கரைப்பகுதிகளில் கள ஆய்வு செய்தனர்.

அதில், பாளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பல்லவர் கால சிவன் கோவில் அருகில், சாலையோரம் மண்ணில் புதைந்த நிலையில் சிலை இருப்பதை அறிந்தனர். அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அது அரிகண்டம் சிலை என்பது தெரிந்தது.

இந்த சிலையில், ஒரு வீரன் தன் வலது கையில் ஏந்திய குறுவாளால் கழுத்தை அரிந்துகொள்வது போலவும், இடதுகை குறுவாளை, நிலத்தில் ஊன்றி தன்னை தாங்கியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நின்ற கோலத்தில் உள்ள இந்த வீரன் சிலை, 3. 5 அடி உயரமாக உள்ளது. வீரனின் பின்தலையின் இடப்பக்கம் வளைந்த கொண்டையும், கழுத்தில் ஆபரணங்களும் உள்ளன. இடையில் ஆடை, சன்னவீரம் அணிந்துள்ளார். இரு கால்களிலும் அணிகலன்கள் உள்ளன.

இந்த சிலையில் உள்ள ஆபரணங்கள், உடை உள்ளிட்டவற்றின் அமைப்பு, விஜயநகர பேரசு காலமான 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி