கூடுவாஞ்சேரியில் லேப்டாப் கடையில் திருடிய 2 கைது

58பார்த்தது
சென்னை கூடுவாஞ்சேரி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ள லேப்டாப் சர்வீஸ் சென்டரில் கடந்த 13ஆம் தேதி அன்று இரவு சர்வீஸ் சென்டரின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த 2 லட்சம் மதிப்பிலான 4 லேப்டாப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கடையின் மேனேஜர் கிருபாகரன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வி அவர்கள் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.!!

இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும்
ரவிபாரதி வயது 21, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் வயது 29
மற்றும் 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்

இதுவரை பல்வேறு கடைகளில் லேப்டாப்புகளை திருடி உள்ளோம் அதனை பிரித்து உதிரி பாகங்களை தனித்தனியாக ஒவ்வொரு கடைகளுக்கு விற்போம் என பகிரகமாக வாக்குமூலம் அளித்தனர்

பின்பு மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இரண்டு நபர்களை சிறையில் அடைத்தனர் சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி