காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஜி. செல்வம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று செய்யூர் தொகுதியில் திமுகவினர் 500 க்கும் மேற்பட்டோர் மேலத்தாலும் முழங்க பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி சால்வை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்யூர் பஜார் பகுதியில் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எம். எஸ். பாபு, சிற்றரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் சமியுத்தா அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.