கேட்டில் லாரி மாட்டிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு

62பார்த்தது
சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம்
மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் -செய்யூர் பிரதான நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வழக்கம்போல ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டது ரயில்வே பாதையை கடந்து செல்லும் பொழுது கனரக லாரி இரு தண்டவாளத்திற்கு இடையே மாட்டிக்கொண்டது. இதனால் லாரி எடுக்க முடியாத சூழ்நிலையால் உருவானது.

அடுத்த ரயில் பாதையில் எதிரே ரயில் இன்ஜின் மட்டும் வந்ததால் தாமதமாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து பொதுமக்கள் தண்டவாளத்துக்கு இடையே மாற்றிக் கொண்ட லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சரியானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி