மொறப்பாக்கம் பயனற்ற இடத்தில் பேருந்து நிழற்குடை கட்டியதாலும் பொதுமக்கள் பயன்படாமல் வீணாகிபோன பேருந்து நிழல் குடை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மொறப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2020-21 - ஆம் நிதி ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொறப்பாக்கம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிழல் குடையை பேருந்து நிறுத்தும் இடத்தில் கட்டப்படாமல் அரசின் நிதியை வீணடித்து வேறு இடத்தில் கட்டியதால் பொதுமக்கள் பயன்படுத்தவில்லை. இதனால் பயன்பாடு இன்றி இருக்கைகள் துருப்பிடித்து பழுதாகி பயனற்ற நிலையில் உள்ளது. ஆகவே, மாநில நெடுஞ்சாலைத்துறை பேருந்து நிழல்குடையினை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிறுத்தம் இடத்தில் மாற்றி அமைத்து வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பயன்படுத்தாமல் பயனற்று போன நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.