தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமத்திற்கு தமிழ்நாடு அரசு பரிசு

60பார்த்தது
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமான வேடந்தாங்கலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு


செங்கல்பட்டு மாவட்டம்வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்டு சித்தாத்துார், துறையூர், விநாயக நல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தீண்டாமை கடைபிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும் , ஒரு ஆதிதிராவிடர் கிராமமாக, வேடந்தாங்கல் ஊராட்சி, தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது.
அதன்படி, வேடந்தாங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், தீண்டாமை கடைப் பிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு பரிசு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2023 - 24 ல்,
வேடந்தாங்கல் ஊராட்சிக்கு,
மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன், 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி