மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் சந்திப்பு, மொறப்பாக்கம் வழியாக உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின் விளக்கு கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன.
மதுராந்தகம் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன.
அது மட்டுமின்றி, மின்மாற்றி அருகேவளர்ந்துள்ள மரத்தின் கிளைகள், மின் கம்பி களில் உரசுகின்றன. இதனால், மின் கசிவு ஏற்பட்டு, விபத்து அபாயம் உள்ளது.
மேலும், மாநில நெடுஞ்சாலை துறையினரால் வைக்கப்பட்டுள்ளபெயர் பலகையில் கொடிகள் படர்ந்து, மறைத்துள்ளன.
எனவே, மின்வாரியத் துறையினர், மின்மாற்றி அருகே உள்ள மரம்மற்றும் மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டிஅப்புறப்படுத்தவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.