மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா

78பார்த்தது
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி மதுராந்தகம் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் அவர்கள் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வாழ்வாதார கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகளிடம் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி