செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - ED பதிலளிக்க உத்தரவு

92574பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - ED பதிலளிக்க உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வரும் ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி