கேப்டன் எனும் உற்ற நண்பன் - பிரதமர் மோடி புகழாரம்!

29033பார்த்தது
கேப்டன் எனும் உற்ற நண்பன் - பிரதமர் மோடி புகழாரம்!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் மோடி, விஜயகாந்த் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விஜயகாந்த் மறைவால் ஏராளமான மக்கள் தங்கள் மனங்கவர்ந்த நட்சத்திரத்தை இழந்துள்ளனர். தொண்டர்கள் அன்பிற்குரிய தலைவரை இழந்து வாடுகின்றனர். ஆனால் நானோ, என்னுடைய உற்ற தோழனை இழந்திருக்கிறேன். 'கேப்டன்' சிறப்பு மிக்கவராக திகழ்ந்தது தொடர்பாக என்னுடைய கருத்துகளை விரிவாக எழுதியுள்ளேன். பல்வேறு நாளிதழ்களில் வெளியாகி உள்ள விஜயகாந்த் பற்றிய தன்னுடைய கட்டுரையை குறிப்பிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி