பஞ்சரான கார் டயர்.. மூவர் பரிதாப பலி (வீடியோ)

1073பார்த்தது
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தேவாரப்பள்ளி மண்டலத்தில் உள்ள பந்தாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால் டிவைடரின் மறுபுறம் சென்று, சரியான திசையில் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி