குரூப் - 4 தேர்வு: 8, 150 பேர் 'ஆப்சன்ட்

55பார்த்தது
குரூப் - 4 தேர்வு: 8, 150 பேர் 'ஆப்சன்ட்
டி. என். பி. எஸ். சி. , எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப் 4 தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் செய்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 96 மையங்களில், 142 தேர்வு அறைகளில், 40, 721 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வை கண்காணிக்க, ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட்டன. விண்ணப்பித்தவர்களில், 32, 571 பேர் நேற்று தேர்வெழுதினர். மீதமுள்ள, 8, 150 பேர் நேற்று தேர்வெழுதவில்லை.

விண்ணப்பதாரர்கள், அனுமதி சீட்டுடன் காலை 9: 00 மணிக்கு, தேர்வுக் கூடத்திற்கு வர வேண்டும் எனவும், அடையாள அட்டையின் அசல் ஆவணம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என, டி. என். பி. எஸ். சி. , நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தெளிவாகக் கூறியிருந்தது.

ஆனால், விண்ணப்பதாரர்கள் பலரும் 9: 00 மணியை கடந்து, தேர்வு மையத்திற்குள் செல்ல முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், தேர்வர்களை அனுமதிக்க மறுத்தனர்.

இதனால், பல மையங்களில் போலீசாருக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாமதமாக வந்த பலரும் தேர்வெழுத முடியாமல், வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி