செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மாமல்லபுரம் கல்பாக்கம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கடலில் கரைக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின்தினேஷ் மோடக், கூடுதல் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர், கோவளம் கடற்கரையில் சிலைகள் கரைக்கும் பகுதியை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சிலைகள் ஏற்றிவரும் வாகனங்களை அனுமதிப்பது அவை கடற்கரை செல்வதும் பின்பு வெளியேறும் வகையில் அணுகு பாதை அமைப்பது, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி, சிலைகளை கடலில் இறக்குவதற்கான கிரேன் இயந்திரம் வசதி ஏற்படுத்துவது, தீயணைப்பு வீரர்கள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது