கடலில் மாயமான கல்லூரி மாணவர்களின் உடல் தேடும் பணி தீவிரம்

54பார்த்தது
ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் என இரு குழுக்களாக இன்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அனைத்து புராதன சின்னங்கங்களையும் சுற்றி பார்த்த கல்லூரி மாணவர்கள் மொத்தம் 40 பேர் கடற்கரைக்கு சென்று அங்கு 20-க்கும் மெற்பட்ட மாணவர்கள் கடலில் குளித்தனர். இதில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 10 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. உடன் கரையில் இருந்த சக மாணவர்கள் தங்கள் நண்பர்களை காப்பாற்ற கோரி கூச்சல் போடவே கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் பணியில் இருந்த மீனவர்கள் மணிமாறன், ராஜி, விஜி, சதீஷ் ஆகியோர் கடலில் சர்பிங் பலகையின் உதவியுடன் நீந்தி சென்று கடலில் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 5 மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய்(24) என்ற மாணவர் மூச்சு திணறி உயிரிழந்தார். அவரது உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. பிறகு மாயமான அனந்தபூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ்(26), ஷேசாரெட்டி(25), நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மவுனீஷ்(18), பார்த்துஷா(19) ஆகிய 4 பேரை மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் கடலில் மூழ்கி காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் குணமடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி