ரயில்வே ஸ்டேஷன் திட்டம் தேர்வு செய்ய பிரதமருக்கு மனு

53பார்த்தது
ரயில்வே ஸ்டேஷன் திட்டம் தேர்வு செய்ய பிரதமருக்கு மனு
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை ‛அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ் தேர்வு செய்யகோரி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழப்புணர்வு சங்க காஞ்சி மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

மனு விபரம்:

நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை ‛அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு தேர்வு செய்து மேம்படுத்தி வருகிறது. இதில், சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை, ஆவடி, தாம்பரத்திற்கு அடுத்து, மாநகராட்சி அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை ‛அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யவில்லை.

காஞ்சிபுரம் முக்கிய ரயில் நிலையமாக இருந்தாலும், இங்கு போதுமான வசதி இல்லை. எனவே, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் காஞ்சியை தேர்வு செய்து, தற்போதுள்ள மூன்று நடைமேடையை விரிவுபடுத்தி, ஐந்து நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக மாற்ற வேண்டும்.

ரயில் நிலையத்திற்குள் அரசு நகர பேருந்து வந்து செல்லவும், ரயில் நிலையத்தில் பட்டு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பட்டு புடவை கண்காட்சி அமைக்கவும், பன்னடுக்கு வாகன நிறுத்தம், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் எங்கு நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் போர்டு அமைக்கவும், பிளாட்பாரங்களில் கூடுதல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி