சீவாடி ஊராட்சியில் மாபெரும் கண் பரிசோதனை மருத்துவ முகாம்

71பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் சீவாடி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அதில் 25 பேருக்கு கண்ணுறுவை சிகிச்சை செய்வதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர். வருகின்ற செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட செல்லப்பட்டனர்.
கண் மருத்துவ பரிசோதனை முகமை ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் அவர்களை ஊராட்சி கிராம பொதுமக்கள் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்யப்படும் கிராம பொது மக்கள் அவர்களது ஆயுட்காலம் வரை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் இலவச கண் மருத்துவ வசதி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி