சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் மீது லாரி மோதி பழுது

55பார்த்தது
சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் மீது லாரி மோதி பழுது


ரயில்வே கேட்டை கயிறு கட்டி திறக்கும் அவல நிலை



செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் ரயில்வே கிராசிங்கில் ரயில்வே கேட் மூடி திறக்கும் பொழுது கேட் மீது லாரி மோதியதில் பழுதானது. இதனால் ரயில் சென்ற பிறகு கேட் திறக்க முடியாமல் இருந்தது. இதனால் இரு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் தற்காலிமாக பழுதான ரயில்வே கேட்டை கயிறு கட்டி இழுத்து நிறுத்தினர். அதன் பண்ண இரு பக்கமும் வாகனங்கள் சென்றன. தொடர்ந்து மாலை நேரம் என்பதால் சென்னையில் இருந்து தென்தமிழக நோக்கி ரயில்கள் செல்ல இருப்பதால் ரயில்வே கேட் மூடி ரயில்வே ஊழியர்களால் மீண்டும் மீண்டும் கயிறு கட்டி இழுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் காலதாமதம் ஆவதால் இரு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் கடந்த பல மாதங்களாகவே பல்வேறு நிலைகளில் பழுதாகி வருகிறது. இந்த ரயில்வே கேட்டை சீரமைத்து புதிய கேட் நிறுவமால் இருப்பதால் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி