திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா

72பார்த்தது
திருக்கழுக்குன்றம் அடுத்த முத்திகை நல்லான் குப்பம் அருள்மிகு தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த முத்திகை நல்லான் குப்பத்தில் எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா சமேத அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் உள்ளது இக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது. சிறு ஆலயமாக இருந்த இவ்வாலயத்திற்கு கோபுர விமானத்துடன் மஹா மண்டபத்தோடு புதிய ஆலயம் கட்டப்பட்டது. கடந்த ஒரு வருட காலமாக நடைப்பெற்று வந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மஹா கும்பாபிஷேகம் நடத்திட ஆலய நிர்வாகிகள் முடிவு செய்தனர் இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 7 ஆம் தேதி 3 யாகசாலையுடன் பிரதான கலசம் மற்றும் துணை கலசங்கள் அமைத்து மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மற்றும் கோ பூஜை, வாஸ்து சாந்தி என நான்கு கால பூஜைகள் இன்று முடிவடைந்து மஹா பூர்ணாஹூதியுடன் சிவாச்சாரியார்கள் புனிதரின் நீர் உள்ள கலசத்தை மங்கள வாத்தியம் முழங்க சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று ஆலய கோபுர விமானம் மற்றும் மூலவர்களுக்கு கலசங்களிலிருந்த புனித நீரினை கொண்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி