செங்கல்பட்டில் மத்திய அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மணல் லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் கட்டுமான தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரியம் தங்கம் வைரம் பிளாட்டினம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைத்து அறிவித்துள்ள நிதி அமைச்சர் கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி 28% உயர்த்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதியதாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வாகன திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய குழு அமைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் மத்திய அரசின் புதிய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட கட்டுமான சங்கங்களின் பிரதிநிதிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி