சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாமல்லையில் விழிப்புணர்வு

59பார்த்தது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாமல்லையில் விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று, மாமல்லபுரத்தில், அபிராமி யோகாலயம் அமைப்பினர், தலைவர் சுரேஷ்பாபு தலைமையில், விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தினர்.

பள்ளி சிறுவர் - சிறுமியர், இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பது, காற்று மாசை குறைப்பது, மழை வளத்திற்காக மரங்கள் வளர்ப்பது, பிளாஸ்டிக் தவிர்ப்பது, குப்பையை அதற்காக ஒதுக்கிய இடத்தில் இடுவது உள்ளிட்டவை குறித்து, அவர்கள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.

அதுகுறித்து விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழியும் ஏற்றனர். மாமல்லபுரத்தில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தருணிகா என்ற மாணவிக்கு, பரிசு வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வாக, வாழை இலையில் பாரம்பரிய பண்டம் வழங்கப்பட்டது.

ஹேன்ட் இன் ஹேன்ட் தன்னார்வ நிறுவனத்தினர், தனியார் கல்லுாரி மாணவியருடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரூராட்சித் தலைவர் வளர்மதி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி