ஆனுார் கோவில் திருப்பணிகள் முடக்கம்
By Rajasekar 79பார்த்ததுதிருக்கழுக்குன்றம் அருகில், பாலாற்று படுகையாக உள்ள ஆனுார் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், வேதநாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
வேதநாராயண பெருமாள், தம் தேவியருடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமி திருமேனி சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
முன்மண்டப இடதுபுறம், சீதாதேவியுடன் கோதண்டராமர், வலதுபுறம் லஷ்மி நாராயண பெருமாள், விஷ்வக்சேனர், திருமங்கையாழ்வார். பிற ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் உள்ளிட்டோர் வீற்றுள்ளனர்.
பெரிய திருவடி கருடரும், தனி சன்னிதியில் வீற்றுள்ளார். கோவிலின் முன் உயரமான கல்லாலான விளக்குத்துாண் உண்டு.
பிரம்மாவிடம் இருந்து வேதங்களை பறித்த அசுரர்களை, மகாவிஷ்ணு அழித்து, வேதங்களை மீட்டு, இங்கு பிரம்மாவிடம் அளித்து, வேதநாராயண பெருமாளாக தோன்றியதாக தல வரலாறு.
சுமார் 1, 300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கோவிலுக்கு, பல்லவ, சோழ மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.
ஆனியூர், ஆதியூர், சித்திரமேழி, விண்ணகரம் உள்ளிட்ட பெயர்களிலும் விளங்கியுள்ளது.
இத்தகைய ஆன்மிக சிறப்பு வாய்ந்த கோவிலை, நீண்டகாலம் பராமரிக்கவில்லை.
தினசரி வழிபாடு மட்டுமே தொடர்ந்தது. கோவிலை புனரமைத்து மேம்படுத்துமாறு, பக்தர்கள் வலியுறுத்தினர்.