மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் எதிரே உள்ள குளத்தில் புரட்டாசி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் உள்ள ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் எதிரே உள்ள குளத்தில் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக காலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து எல் பச்சரிசி தர்ப்பை புல் பூ அச்சு வெல்லம் உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.