தொழில்சார் சிகிச்சை குறித்து 3-நாள் தேசிய மாநாடு துவக்க விழா

63பார்த்தது
எஸ். ஆர். எம் ஐஎஸ்டியில் தொழில்சார் சிகிச்சை குறித்து 3-நாள் தேசிய மாநாடு துவக்க விழா.

எஸ். ஆர். எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இணை வேந்தர் டாக்டர் பா. சத்தியநாராயணன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளதூரில் உள்ள பிரபல எஸ். ஆர். எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்சார் சிகிச்சை குறித்து மூன்று நாள் தேசிய மாநாடு துவக்க விழா நடைபெற்றது. அதில் எஸ். ஆர். எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இணை வேந்தர் மன இறுக்கம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், அத்தகைய மையங்கள் ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவைகள், சிகிச்சைகள் மற்றும் நோயறிதல்களை வழங்க வேண்டும், மேலும் மன இறுக்கம் கொண்டவர்களின் தரத்தை மேம்படுத்த சமூகம் உழைக்க வேண்டும், என டாக்டர் பா. சத்தியநாராயணன் தெரிவித்தார்.

அவரது உரையில், அகில இந்திய தொழில்சார் சிகிச்சையாளர்கள் சங்கத்தின் (AIOTA) தலைவர் டாக்டர் பங்கஜ் பாஜ்பாய், ஆட்டிசம் 3 நாள் மாநாட்டை நடத்தியதற்காக அமைப்பாளர்களைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி