செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய புதிய நிலையம் திறப்பு விழா.

78பார்த்தது
செங்கல்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட 27 ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு போலிஸ் அவுசிங் கார்ப்ரேஷன் நிதியில் 1. 18 இலட்ச மதிப்பீட்டில் ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி வெண்பாக்கம், நேதாஜி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு காவல் நிலைய கட்டிடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து.
செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், சார் ஆட்சியர் நாராயண சர்மா, துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிகிட்(Anikit) ஆகியோர் புதிய காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

இந்நிகழ்வில் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் திருமலை, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி